“கோலி முதலில் உங்க ஈகோ மோதலை விடுங்க” - கபில் தேவ் அட்வைஸ்

advice viratkohli kapildev ego
By Irumporai Jan 17, 2022 06:05 AM GMT
Report

விராட் கோலி தனது ஈகோ மோதல் இருந்ததாக என்பது குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் அறிவுரை கூறியுள்ளார். 

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் தோல்விக்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதால், பிசிசிஐ அழுத்தம் கொடுத்து விலக வைத்ததா என்று பல்வேறு கேள்விகள் உலா வருகின்றன. 

ஆனால் இதுகுறித்து விளக்கமளித்திருந்த பிசிசிஐ, விராட் கோலியே தான் தாமாக முன்வந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதனை அவர் தெளிவாக தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டது.

டி20 மற்றும் ஒருநாள் அணி கேப்டன்சியில் இருந்து விலகியதில் இருந்து அவருக்கு டெஸ்டில் மட்டும் நெருக்கடி இருந்ததாக தெரிகிறது. இதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே இது நல்ல முடிவு தான் என முன்னாள் வீரர்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி ஈகோ இல்லாமல் இனி விளையாட வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், டி20 கேப்டன்சியில் இருந்து விலகியதில் இருந்தே கோலிக்கு அழுத்தம் இருந்து வருகிறது.

“கோலி முதலில் உங்க  ஈகோ மோதலை விடுங்க”  - கபில் தேவ் அட்வைஸ் | Ego Kapil Dev Gives A Key Advices To Virat Kohli

அவரின் செயல்பாடுகளில் நன்றாக தெரிந்தது. ஒருவேளை அவருக்கு கேப்டன்சி செய்யவே பிடிக்காமல் போய்யிருக்கலாம். நாம் அதனை மதிக்க வேண்டும். எனவே இனி எவ்வித அழுத்தமும் இனி சுதந்திரமாக செயல்படலாம். 

33 வயதாகும் விராட் கோலி, இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்துள்ளார். இதுவரை 68 டெஸ்ட் களில் வழிநடத்தி 40 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தார். இதே போல டெஸ்ட் புள்ளிப்பட்டியலிலும் இந்தியாவை உச்சிற்கு கொண்டு சென்றவர். அவரின் கேப்டன்சி ஆற்றல்களை அடுத்து வரும் கேப்டனும் பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.