சத்துணவில் கொடுக்கப்பட்ட அழுகிய முட்டை – தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்
கரூரில் சத்துணவு மையத்தில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரைத் தொடர்ந்து 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களும் மதிய உணவு மற்றும் முட்டையும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் நாகனுரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகள் அழுகி, அதில் புழுக்கள் இருந்துள்ளது.
மேலும், இந்த முட்டையிலிருந்து ஒரு வித துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ‘