ஒரு முட்டை 72 ரூபாய்.. வரலாறு காணாத அளவில் உயர்ந்த முட்டை விலை - எங்கு தெரியுமா?
முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
முட்டை விலை
அமெரிக்காவில் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவில் ஒரு முட்டையின் விலை, ரூ.15 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்பொழுது ஒரு முட்டை சுமார் 72 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து அமெரிக்கத் தொழில் துறை கூறுகையில்,’’சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பறவைகளுக்குள்ளும் பாலூட்டிகளுக்கும் பரவும்போது அவ்வளவாகப் பாதிப்பு ஏற்படாது.
அமெரிக்கா
ஆனால் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு நேரடியாகப் பரவும் போது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 2.3 கோடி பறவைகளையும், பிப்ரவரி மாதத்தில் 1.8 கோடி பறவைகளையும் கொல்லப்பட்டுள்ளது.
இதனால் முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இவை கடந்த ஆண்டு ஜனவரி உடன் ஒப்பிடும்போது முட்டை விலை 65% உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளது. அதாவது முட்டை விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.