தங்கம் ஏறும் வேகத்தில் வரலாறு காணாத உச்சத்தில் முட்டை விலை - என்ன காரணம்?
முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
முட்டை விலை
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் மொத்தம் 1300 கோழிப் பண்ணைகள் உள்ளன.

இங்கு உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது.
உச்சம்
முட்டை கொள்முதல் விலை ரூ. 5.90 காசுகளாக இருந்து வந்தது. இந்நிலையில் நாமக்கல்லில் நடந்த என்இசிசி கூட்டத்தில் முட்டையின் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் முட்டை கொள்முதல் விலை ரூ 5.95 காசுகளாக அதிகரித்துள்ளது.

வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரிப்பு காரணமாக முட்டையின் கொள்முதல் விலை அதிகரித்துள்ளது.
இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் முட்டை ஒன்றின் விலை ரூ 7-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.