மீண்டும் முட்டை விலை உயர்ந்தது - மக்கள் அதிர்ச்சி
நீண்ட நாட்களாக முட்டை விலை அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில், நாமக்கல்லில் முட்டை விலை குறைந்தது.
ஒரு முட்டை ரூ.4.10க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது நாமக்கலில் கடந்த 7 நாட்களில் முட்டை விலை 90 காசுகள் உயர்ந்துள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 35 காசுகள் உயர்த்தி ஒரு முட்டையின் விலை 4 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயம் செய்தது. தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் அமலில் உள்ளதால் முட்டை விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது.
கோடைக்காலம் துவங்கியதால் முட்டை உற்பத்தியில் 10 முதல் 20 சதவீதம் குறைந்துள்ளது. எனவே முட்டை விலை உயர்த்தப்பட்டிருப்பதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் நாட்களில் முட்டை விலை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.