வரலாற்றிலேயே உச்சத்தை எட்டிய முட்டையின் விலை

Egg
By Fathima Jul 14, 2026 03:47 AM GMT
Report

நாமக்கலில் கோழிப்பண்ணை வரலாற்றிலேயே முட்டை கொள்முதல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

முட்டையின் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டு இன்று 6.70 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விலை அதிகரிப்பு ஏன்?

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த முட்டையின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதற்கு காரணமாக கோழிகளுக்கான தீவனமான சோளம், சோயா புண்ணாக்கு மற்றும் கருவாடு போன்றவற்றின் விலை அதிகரிப்பே என கூறப்படுகிறது.

இதனால் முட்டையின் உற்பத்தி செலவு அதிகரிப்பதால் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

வரலாற்றிலேயே உச்சத்தை எட்டிய முட்டையின் விலை | Egg Price Increased In Namakkal

உற்பத்தி சரிவு

அத்துடன் கடுமையான வெயில் மற்றும் தீவன விலை அதிகரிப்பால் முட்டை உற்பத்தி திறனும் குறைந்துள்ளது.

இதற்கிடையே அரசின் சத்துணவுத்திட்டம், அண்டை மாநிலங்களில் முட்டைக்கான நுகர்வு அதிகரித்துள்ளது.

இதன்காரணமாகவே கொள்முதல் விலை அதிகரிக்கிறது, இதனால் பெருநகரங்களில் முட்டையின் விலை ரூ7.50 முதல் ரூ.8.50 வரை விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.

வரலாற்றிலேயே உச்சத்தை எட்டிய முட்டையின் விலை | Egg Price Increased In Namakkal