சென்னையில் நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட் விற்பனை...
சென்னையில் நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட் விற்பனை செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு வார காலம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு சார்பில் நடமாடும் வாகனங்களில் அந்தந்த தெருக்களுக்கே சென்று பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் மக்களின் தேவை கருதி நடமாடும் காய்கறி வாகனங்களில் இனி முட்டை, பிரட் ஆகியவற்றையும் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நடமாடும் வாகனங்களின் விவரங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/vegsales/ என்ற இணையதளத்தில் காணலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.