அழுகும் தோல்; மனிதர்களை மிருகமாக்கும் Zombie Drug - பகீர் வீடியோ

Viral Video United States of America
By Sumathi Feb 25, 2023 06:03 AM GMT
Report

போதைப் பொருளை பயன்படுத்துவதால் ஜாம்பி போல மனிதர்கள் நடந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப் பொருள்

அமெரிக்காவில் புதிதாக போதைப் பொருள் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. அதன் பெயர் tranq அல்லது Xylazine. பொதுவாக இது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பால் அங்கிகரிக்கப்பட்ட மருந்து. இதனை விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வெட்னரி மருத்துவமனைகளில் அமெரிக்காவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

அழுகும் தோல்; மனிதர்களை மிருகமாக்கும் Zombie Drug - பகீர் வீடியோ | Effects Of Zombie Drug Attacks On America

இதனை வைத்து தான் போதைப் பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுகிறது. Xylazine மனிதர்களுக்கு பயன்படுத்தக் கூடாது. அதுவும் இதனை ஓவர் டோஸ் எடுத்துக்கொண்டால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Zombie 

Zombie Drugஐ பயன்படுத்தினால் அடுத்த சில நாட்களுக்கு தூக்கமே வராதாம். அதோடு தீவிர மன அழுத்தம், கை, கால்களில் மோசமான புண்கள் ஏற்படுமாம். அதனை அப்படி கவனிக்காமல் விட்டால் தோல் முழுவதும் பாதிப்படைந்து அழுகிவிடுமாம்.

அழுகும் தோல்; மனிதர்களை மிருகமாக்கும் Zombie Drug - பகீர் வீடியோ | Effects Of Zombie Drug Attacks On America

2021-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க்கில் மட்டும் இந்த போதைப் பொருளை அதிகமாக பயன்படுத்தியதால் 2,668 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் tranq-ஐ பயன்படுத்தியதும் உச்சகட்ட போதை அடைவதால், அதனை பயன்படுத்துபவர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்களாம்.

அதோடு அவர்களுக்கு எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் நினைவில் இருக்காதாம். ஜாம்பிக்கள் போல சாலைகளில் ஒருசிலர் சுற்றித்திரியும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.