தம்பியின் காதலிக்கு அண்ணனுடன் நடந்த திருமணம் - ஈரமான ரோஜாவே சீரியலால் நேர்ந்த சிக்கல்

eeramaanarojaave2 ஈரமானரோஜாவே2
By Petchi Avudaiappan Mar 24, 2022 07:17 AM GMT
Report

ஈரமான ரோஜாவே சீரியலில் திடீர் திருப்பமாக காதலிக்கு அண்ணனுடன் நடந்த திருமணத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கதைப்படி ஜீவாவும் காவ்யாவும் ஏற்கெனவே காதலித்து வருகிறார்கள். திடீரென ஜீவாவின் அண்ணன் பார்த்திபனுக்கும்,காவ்யாவின் அக்கா பிரியாவுக்கு இடையே திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. 

இதனால் ஜீவா - காவ்யா காதலுக்கு அவர்களது வீட்டில் க்ரீன் சிக்னல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் அதிரடியான ட்விஸ்ட் ஒன்று ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. 

அதாவது கல்யாண தினம் அன்று பிரியா கடத்தப்பட அவரை ஜீவா கஷ்டப்பட்டு மண்டபத்திற்கு அழைத்து வருகிறார். ஆனால் அதற்குள் ஜீவாவின் காதலியான காவ்யாவுக்கும், அவரது அண்ணன் பார்த்திபனுக்கும் இடையே திருமணம் நடைபெற்று விடுகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.