கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் - நீதிபதிகள்
மாணவர்கள் அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நீதிபதி விமர்சனம்
உசிலம்பட்டி மூக்கையா தேவர் கல்லுாரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக தேனியைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையின் போது அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்க வேண்டும்.
அமெரிக்கா போன்று வளர்ந்த நாடுகளில் திறமை அடிப்படையில் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது என நீதிபதி மகாதேவன் கருத்து தெரிவித்தார்.
கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் காத்து கிடக்கும் சூழ்நிலை நிலவுகிறது.கல்வி நிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் BMW காரில் பயணிப்பது தற்போதைய சூழலாக உள்ளது என விமர்சித்தார்.
இந்த நிலையில் கல்லுாரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து தமிழக உயர்கல்வித்துறைக்கு உத்தவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை.