அலுவலகத்தில் மனைவியுடன் நடனமாடிய கல்வி அதிகாரி - வெடித்த சர்ச்சை

Viral Video Punjab
By Sumathi Aug 14, 2025 05:11 PM GMT
Report

கல்வி அதிகாரி அலுவலகத்தில் மனைவியுடன் நடனமாடிய சம்பவம் சர்ச்சையாக வெடித்துள்ளது.

அலுவலகத்தில் நடனம்

பஞ்சாப், மோகா மாவட்டத்தில் தொடக்க கல்வி அதிகாரி அலுவலகம் உள்ளது. இங்கு தேவி பிரசாத் என்பவர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

அலுவலகத்தில் மனைவியுடன் நடனமாடிய கல்வி அதிகாரி - வெடித்த சர்ச்சை | Education Officer Dances Wife Office Video Viral

இவர் அலுவலகத்தில் அவரது மனைவியுடன் பிரபல இந்தி பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரி சஸ்பெண்ட்

அந்த வீடியோவில், தேவி பிரசாத்தும், அவரது மனைவியும் அலுவலகத்திற்குள் கையில் துணியை வைத்துக்கொண்டு நடனமாடிய காட்சிகள் இருந்தன. தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

என் படத்தை பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது? பிரியங்காவுக்கு மின்டா தேவி கேள்வி!

என் படத்தை பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது? பிரியங்காவுக்கு மின்டா தேவி கேள்வி!

இதுகுறித்து தேவி பிரசாத் கூறுகையில், வீடியோ எடுக்கப்பட்ட நாளில் எனது அலுவலகத்தில் பணியில் இருந்தேன். அன்று எங்கள் திருமண நாள். எனவே எனது மனைவி அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது வேடிக்கையாக மட்டுமே இந்த வீடியோ எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். தற்போது இதுதொடர்பாக அதிகாரிகள் துறை ரீதியாக அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.