கல்விக் கடன் வாங்கும்போது நீங்கள் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்!
கல்விக் கடன் பெறுவதற்கு முன் நீங்கள் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்த தகவல்கள் .
கல்விக் கடன்
மாணவர்கள் தங்கள் கல்வியினை சிறப்பாகப் படிக்கவும், உயர்க்கல்வி பயிலவும் கல்விக் கடன்கள் பெரிதும் உதவுகின்றன. இந்த கல்விக் கடன்கள் மாணவர்களின் கனவுகளை நினைவாக்க உதவியாக இருக்கிறது.
கடன் தொகை, திரும்பச் செலுத்தும் காலம், வட்டி விகிதம்,தகுதி ஆகியவை கடனளிப்பவர் மற்றும் கடன் வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் வேறுபடலாம். சில கல்வி கடன்களுக்கு பிணை அல்லது உத்திரவாதமும் தேவைப்படலாம். மற்ற வங்கிகள் இது எதுவும் இல்லாமலும் கல்விக்கடன் தரலாம்.
எனவே கடன் பெறுவதற்கு முன் நீங்கள் சிந்திக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
தகுதிகள்
கடன் வழங்குவதற்காக வெவ்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வெவ்வேறு வகையான தகுதி நிபந்தனைகள் உள்ளது. சில வங்கிகள் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பிரத்தியேகமான கடன்களை வழங்குகிறது. மற்ற வங்கிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச படிப்புகளுக்கு கடன் வழங்குகிறது. கடன் வாங்குபவரின் வயது, கல்விப்பின்னணி,படிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு வழங்கப்படுகிறது.
ஆவணங்கள்
கல்விக்கடன் பெறுவதற்கு இருப்பிடச் சான்று, வருமானச் சான்று , அடையாள அட்டை, மற்றும் கல்வி சம்மந்தப்பட்ட ஆவணங்கள், வங்கிக்கணக்கு அறிக்கை ஆகியவை தேவை. இந்த ஆவணங்கள் அனைத்தும் உங்களிடம் தயாராக இருந்தால் உங்களுக்கு கடன் விண்ணப்ப நடைமுறை வேகமாக இருக்கும்.
கடன் தொகை
நீங்கள் கல்விக்கடன் பெறும்போது உங்களுக்கு எவ்வளவு தொகை தேவை என்பதை கவனமாக தீர்மானித்து பெறவேண்டும். நீங்கள் தொகையை கணக்கிடும்போது உங்கள் கல்விக் கட்டணம், வாழ்க்கை செலவு, உங்கள் படிப்பிற்கு தேவையான பொருட்கள் வாங்க செலவாகும் தொகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நீங்கள் கடன் தொகையை தீர்மானிக்க வேண்டும்.
கடனை திரும்பிச் செலுத்துதல்
கடனை திரும்பச் செலுத்த உங்களுக்கு ஒரு கால அவகாசம் வழங்கப்படும். எனவே நீங்கள் கடனை திரும்பச் செலுத்தப் போகும் காலத்தை ஆராய்ந்து தீர்மானியுங்கள். இது உங்களுக்கு பணத்தை ஏற்படு செய்வதற்கு உதவியாக இருக்கும்.
வட்டி விகிதம்
வெவ்வேறு வங்கிகளில் வெவ்வேறு வட்டி விகிதங்கள் இருக்கக் கூடும். அதனை நன்கு ஆய்வு செய்ய வேண்டும். எந்த வங்கி குறைவான வட்டி விகிதத்தில் கடன் தருகிறதோ அந்த வங்கியை தேர்ந்தெடுப்பது உங்கள் கடன் சுமையை குறைக்கும்.
மறைக்கப்பட்ட கட்டணம்
ஆவணங்களில் கையெழுத்திடும் முன் நன்கு படித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் செயலாக்கக் கட்டணம், முன்கூட்டியே செலுத்தும் கட்டணம், தாமதக் கட்டணம் மாற்று அபராத தொகை ஆகியவை அந்த கடனில் சேர்க்கப்பட்டிருக்கலாம் . எனவே ஆவணங்களை நன்கு படுத்து ஆராய்ந்த பின்னரே கையெழுத்திட வேண்டும்.