உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் No.1; திமுக ஆட்சியில் கல்வித்துறை மறுமலர்ச்சி - முதல்வர் ஸ்டாலின் !

M K Stalin Tamil nadu Chennai
By Swetha Aug 02, 2024 08:00 AM GMT
Report

திமுக ஆட்சியில் கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் No.1; திமுக ஆட்சியில் கல்வித்துறை மறுமலர்ச்சி - முதல்வர் ஸ்டாலின் ! | Education Department Has Revived Says Tn Cm Stalin

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக உள்ளனர். தமிழக மாணவர்களின் அறிவாற்றல் தேசத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே பெருமை. ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மனதார வாழ்த்துகிறேன்.

உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம்தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன்றாக உள்ளது. தமிழக அரசின் பிரதிநிதிகளாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின்

முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சாரை சாரையாக சேர்ந்து வருகிறார்கள். திமுக ஆட்சியில் 2022ம் ஆண்டு 75 அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க சென்றார்கள். 2023-ம் ஆண்டு 274 மாணவர்களும்,

தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கல்வித்துறை மறுமலர்ச்சி

இந்தாண்டு 447 மாணவர்கள் என இரு மடங்காக அதிகரித்துள்ளது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 17% அதிகரித்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நம் மாணவர்கள் எதையும் சாதிப்பார்கள், விண்வெளியில் கூட இனி அரசுப் பள்ளி மாணவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள்;

உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் No.1; திமுக ஆட்சியில் கல்வித்துறை மறுமலர்ச்சி - முதல்வர் ஸ்டாலின் ! | Education Department Has Revived Says Tn Cm Stalin

துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாகதான் மாணவர்கள் உங்கள் நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். அவர்கள் கல்வி பயில வேண்டிய ஆதரவையும், உந்துதல்களையும் நீங்கள் வழங்க வேண்டும்.

மாணவர்களாகிய நீங்கள் இந்த நிலைக்கு வர பல தடைகளை தாண்டி வந்து உள்ளீர்கள்; இனியும் தடைகள் வரலாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். என்று தெரிவித்துள்ளார்.