நடப்பு கல்வியாண்டுக்கான பாடத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

school cm stalin tv edu
By Arun Raj Jun 19, 2021 09:10 AM GMT
Arun Raj

Arun Raj

in கல்வி
Report

கல்வி தொலைக்காட்சியில் நடப்பு கல்வியாண்டுக்கான பாடத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநுால் மற்றும் கல்வி தொலைக்காட்சியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 292 கோடி மதிப்பில் 2021 - 2022ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான மாணவர்களுக்கு பாடநுால்கள் மற்றும் கல்வி நிகழ்ச்சி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவ,மாணவிகள் பள்ளி செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருந்தபடியே கல்வி பயில ஏதுவாக கல்வி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.