பிரபல திரைப்பட எடிட்டர் கவுதம் ராஜு உயிரிழந்தார் - அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகினர்

By Nandhini Jul 06, 2022 06:09 AM GMT
Report

பிரபல திரைப்பட எடிட்டர் கவுதம் ராஜு (68) காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த கவுதம் ராஜூ இன்று அதிகாலை அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.

சினிமா பயணம்

கடந்த ‘1982’ ஆம் ஆண்டு 'தேக் கபர் ரக் நபார்' என்கிற ஒடியா மொழி படம் மூலம் முதன்முதலாக எடிட்டராக வாழ்க்கையைத் தொடங்கினார். இதனையடுத்து தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் எடிட்டராக பணியாற்றினார்.

‘நாளைய தீர்ப்பு’, ‘கைதி நம்பர் 150’, ‘ஆதி’, ‘கப்பர்சிங்’, ‘கிக்’, ‘கோபாலா கோபாலா’, ‘பத்ரிநாத்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு எடிட்டராக இருந்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'ஆதி' படத்துக்காக இவர் சிறந்த எடிட்டருக்கான தெலுங்கு திரையுலகின் உயரிய விருதான நந்தி விருதை வென்றார்.

கவுதம் ராஜுவின் உயிரிழப்பால் திரையுலக பிரபலங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சினிமா பிரபலங்கள் பலர் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Gautham Raju

நான் நலமாக இருக்கிறேன்..எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை - நடிகை ஸ்ருதிஹாசன்..!