போராட்டத்தில் செல்பி எடுத்து மகிழ்ந்த வீராங்கனைகள்.? - தீயாய் பரவும் போலி புகைப்படங்கள்

By Irumporai May 29, 2023 03:22 AM GMT
Report

டெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வீராங்கனைகள் சிரித்தபடி எடிட் செய்து சிலர் இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீராங்கனைகள் போராட்டம்

மல்யுத்த சம்மேள தலைவர் பிரித் பூஷன் சிங் மீது பாலியல் குற்றசாட்டுக்களை முன்வைத்தும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் பல வாரங்களாக மல்யுத்த வீராங்கனைகள் உட்பட விளையாட்டு வீரார்கள் டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடி வந்தனர்.

  பேரணியால் கைது

நேற்று புதிய நடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது 500க்கும் மேற்பட்ட வீரர் , வீராங்கனைகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் . அப்போது விளையாட்டு வீராங்கனை ஒரு புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டார்.

போராட்டத்தில் செல்பி எடுத்து மகிழ்ந்த வீராங்கனைகள்.? - தீயாய் பரவும் போலி புகைப்படங்கள் | Edited Them Laughing And Posted On The Website

ஆனால், அந்த புகைப்படத்தை சிலர் மாற்றி, தொழில்நுட்ப உதவியுடன் அந்த புகைப்படத்தில் வீராங்கனைகள் சிரித்தபடி இருக்குமாறு தவறாக எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுப்பட்ட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கருத்துபதிவிட்டுள்ளார். 

போலி புகைப்படங்கள்

அதில், ஒன்று எடிட்டிங் செய்யப்பட்ட போலியான புகைப்படம் மற்றும் மற்றொன்று உண்மையானது. உண்மையாக அந்த போட்டோவில் இருப்பவர் சங்கீதா போகட் மற்றும் வினேஷ் போகட். அவர்கள் உண்மையில் சிரிக்கவில்லை. இருப்பினும், சிலர் அதனை மாற்றி சிரிப்பது போல காட்டபட்டுள்ளார். என குறிப்பிட்டுள்ளார்.