பிரதமர் மோடியின் மருத்துவச் செலவு எவ்வுளவு ? ஆர்டிஐயில் வெளியான முக்கிய தகவல்.

BJP Narendra Modi
By Irumporai Jan 10, 2023 06:24 AM GMT
Report

பிரதமர் மோடியின் மருத்துவ செலவு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மருத்துவ செலவு 

கடந்த 2014ம் ஆண்டு மே 26ம் தேதி பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். தொடர்ந்து 8 ஆண்டுகளாக பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கான மருத்துவ செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா கேள்வி எழுப்பியிருந்தார்.

ஒரு ரூபாய் கூட செலவில்லை  

அதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், மருத்துவச் செலவு முழுவதையும் பிரதமரே ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதற்காக, ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா, ஆரோக்கியமான இந்தியா இயக்கம் மூலம் மக்களுக்கு செய்தியை அளிப்பதோடு மட்டுமன்றி, தானே உதாரணமாக இருந்து ஆரோக்கியமாக இருப்பது குறித்து 135 கோடி இந்தியர்களையும் மோடி ஊக்குவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.