"இன்னைக்கு 12 மணிக்கு வர்றோம்" - சூர்யா படத்தின் புதிய அப்டேட் இதோ...

Actor Suriya Edharkum thunindhavan ETupdate
By Petchi Avudaiappan Nov 18, 2021 06:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஜெய் பீம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை ( நவம்பர் 19) மதியம் 12 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.