மேடையில் பாடிக்கொண்டிருந்த பிரபல பாடகர்... சரிந்து விழுந்து மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

By Nandhini May 29, 2022 01:57 PM GMT
Report

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எடவா பஷீர் (78) மேடையில் பாடி கொண்டிருந்தபோது திடீரென உயிரிழந்துள்ளார்.

கேரளாவின் ஆலப்புழாவில் இசை குழு ஒன்றின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரபல பாடகர் எடவா பஷீர் கலந்து கொண்டு மேடையில் உற்சாகமாக பாடி கொண்டிருந்தார். அப்போது, பாடிக்கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்து மரணமடைந்தார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவரது இறப்பு செய்தி கேட்ட சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.