சிறுவனுக்கு முத்தம்; கொஞ்சி விளையாடி குழந்தையாகவே மாறிய இபிஎஸ் - வீடியோ வைரல்!
சிறுவனுடன் கொஞ்சி விளையாடி முத்தம் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமியின் வீடியோ வைரலாகி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி
கருப்பு கவுண்டர் பழனிசாமி என்ற முழு பெயருடன் சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் என்ற சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் எடப்பாடி பழனிசாமி.
இவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் 7வது முதலமைச்சராகவும் பதவியில் இருந்துள்ளார். தற்போது தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராகவும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.
குழந்தையாக மாறிய இபிஎஸ்
அண்மையில் 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ எனப் பெயரிடப்பட்ட அதிமுக மாநாடு பிரம்மாண்டமாக மதுரையில் நடந்து முடிந்தது. இதில் 51 அடி உயர கம்பத்தில் அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கட்சி கொடியேற்றி, பின்னர் மேடையிலும் சிறப்புரையாற்றினார்.
இதில் லட்சக் கணக்கான அதிமுக தொண்டர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டில் மேடையில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்த போது சிறுவன் ஒருவன் அருகில் வந்து இபிஎஸ்-க்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
அவரும் குழந்தையாக மாறி சிரித்தபடியே சிறுவனின் நெற்றியில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிமுக தொண்டர்களும் இந்த வீடியோவை அதிகமாக பதிவிட்டு வருகின்றனர்.