மண்புழு போல சென்ற எடப்பாடி: இதுதான் ஆண்மையா ? வறுத்தெடுத்த கனிமொழி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ‘நீ ஆம்பளையா இருந்தா’ என்று ஏக வசனத்தில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்பி கனிமொழி அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல்
அனல் பறக்கும் பிரச்சாரத்தின் மத்தியில் நேற்று முன்தினம் வாக்களர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவினர் மக்களை கொட்டகையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். நீ ஆம்பளையா இருந்தா, நீ வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா, நீ மீசை வச்ச ஆம்பளையா இருந்தா அவங்களை வெளியே விடு என காட்டமாக திமுகவினரை நோக்கி சீறி பாய்ந்தார்.
இந்நிலையில் இதற்கு தனது தேர்தல் பிரச்சாரத்தில் பதில் அளித்த கனிமொழி, தலைவர் ஸ்டாலினை பார்த்து ஆம்பளையா என்று எடப்பாடி கேட்கிறார். அம்மையார் ஜெயலலிதா இருந்தபோது எடப்பாடி எந்த அளவிற்கு குனிந்து நின்றார் என்பது எங்களுக்கு தெரியும்.
மீசையா வீரம்
அதையும் தாண்டி சசிகலா உங்களுக்கு பதவி அறிவித்த போது நீங்கள் எப்படி மண்புழு போல ஊர்ந்து போனீர்கள் என்பதை அனைவரும் பார்த்தோம். இதுதான் ஆண்மைக்கு அழகா? ஆம்பளைக்கு அழகா? ஆம்பளைக்கும், மீசைக்கும், வீரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை.
நீங்கள் காலில் விழுந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் வேட்டியும், மீசையும் வச்சிக்கிட்டா இருந்தாங்க? மீசை தான் வீரம் என்றால், அதற்கு 50 ஆயிரம் போதும், ஆண் பெண்ணாகலாம், பெண் ஆணாகலாம். இதுவா வீரம்? என கடுமையாக எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தார்