சரியான பச்சை துரோகி எடப்பாடி பழனிசாமி - ஜே.எம்.பஷீர் குற்றசாட்டு
அதிமுக என்ற கட்சி நல்ல இருக்க வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
இஸ்லாமியர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்த எடப்பாடி என்று தெரிவித்து, இதன்தொடர்பான ஆதாரத்தை வெளியிட உள்ளேன். தொடர்ந்து இஸ்லாமிய துரோகி எடப்பாடி பழனிசாமியை கழகத்தை விட்டு நீக்க சொல்லி ஒருங்கினைப்பாளர் OPS அவர்களுக்கு கோரிக்கை வைத்து ஊடகங்களுக்கு பேட்டியளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, செய்தியாளர்களிடம் பேசிய ஜே.எம்.பஷீர், எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க வேண்டும். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழித்து கொண்டியிருப்பதாகவும், அதிமுகவை அழிக்கவந்த பச்சை துரோகி என்றும் குற்றசாட்டினார்.
அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் சசிகலாவினை கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சி முடிவு செய்ய வேண்டும் என ,ஓபிஎஸ் கருத்து தெரிவித்த 4 நாட்கள் ஆகியும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார்.
அதிமுக என்ற கட்சி நல்ல இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றாலும், உடனடியாக அதிகாரத்தை பயன்படுத்தி எடப்பாடியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கூறிய பஷீர் , கழக கட்டுப்பாட்டை மீறி கலங்கம் உண்டாக்கும் வகையில் செயல்படுவதால் அதிமுக கட்சியில் இருந்து பஷீர் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் - இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.