‘‘எடப்பாடியார் தான் டாப் மற்றவர்கள் எல்லாம் டூப்’’ - அமைச்சர் செல்லூர் ராஜு
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தான் டாப் மற்றவர்கள் எல்லாம் டூப் என மதுரையில்அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி மதுரை பைபாஸ் ரோட்டில் நடைபெற்றது. அங்கு நீர் மோர் பந்தலை திறந்துவைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோடை காலங்களில் அதிமுக சார்பில் நீர்மோர் வழங்குவது காலங்காலமாக நடைபெற்று வருவதாக கூறினார்.

மேலும்,அதிமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருப்பதாகவும் அதிமுகவின் ஹீரோ எடப்பாடி பழனிச்சாமி தான் டாப் மற்றவர்கள் எல்லாம் டூப்’ என பேசிய அமைச்சர்.
வெயில் அடிக்கும் பொழுது கூட மழை பெய்து வருகிறது. ஆகவே மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என மக்கள் விரும்புவதாக கூறினார்.