எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே : டிடிவி தினகரன் விமர்சனம்

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Aug 05, 2022 06:58 PM GMT
Report

எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுவடாக அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகாரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வரும் ஆகஸ்ட்15-ஆம்தேதி அமமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்.

எடப்பாடி ராஜபக்சே

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் ராஜபக்சே போன்று செயல்படுகிறார். அதேபோல எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சாதியை வைத்து பிரிவினை செய்வதால், இவரும் ராஜபக்சே போல அந்த தொண்டர்களால் விரட்டப்படுவார்.

எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே : டிடிவி தினகரன் விமர்சனம் | Edappadi Tamil Nadus Rajapakse

மழைக்காலம் தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு, பொதுமக்களுக்கும், பொது சொத்துகளுக்கும், மக்களின் சொத்துக்களுக்கும், குறிப்பாக விவசாயிகளின் சொத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் எனக் கூறினார்.