முதல்வர் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார் - வாரிசு அரசியல் குற்றச்சாட்டிற்கு ஸ்டாலின் பதில்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இந்தத் தேர்தலில் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதனால் திமுகவில் வாரிசு அரசியல் தான் நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதில், “முதல்வர் எடப்பாடி ஓ.பி.எஸ் மகனை நினைத்து வாரிசு அரசியலை பேசி வருகிறார்.
முதல்வர் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்.
தோல்வி பயத்தில் பொய்களை பேசி வருகிறார், தன்னை முதல்வர் ஆக்கியவருக்கு செய்த துரோகத்திற்கு கடவுள் அவரைத் தான் தண்டிப்பார்” என்றார்.