‘‘உயிரை விடவேண்டாம் இருந்து வேடிக்கை பாருங்க’’ - எடப்பாடியாருக்கு ஸ்டாலின் பதில்!
dmk
stalin
edappadi
aiadmk
By Jon
திமுகவை வீழ்த்த உயிரையும் கொடுப்பேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு மறுமொழி அளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'எனது உயிரை கொடுத்தாவது திமுகவை வீழ்த்துவேன்' என கூறியிருந்தார்.

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக இன்று காங்கேயத்தில் பரப்புரையில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின்,
எடப்பாடி பழனிசாமி திமுகவை வீழ்த்த உங்கள் உயிரை எல்லாம் கொடுக்க வேண்டாம். நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து திமுக ஆட்சி நடைபெறுவதை பார்க்க வேண்டும்' என கூறினார்.