ஓபிஸ் சசிகலா அதிமுகவில் இணைப்பா? எடப்பாடி பழனிசாமி பதில்
2026 தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்றக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
இதில் பேசிய அவர், அதிமுக மெகா கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
அதிமுக இணைப்பு
மேலும், தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் அது. நிச்சயம் மக்கள் விரோத ஆட்சி செய்யும் திமுகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் வாக்களிக்க மாட்டார்கள். திமுக அரசு கூட்டணியால்தான் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. கூட்டணி மட்டும் இல்லையென்றால் திமுக அவ்வளவுதான்.
அதிமுகவுக்கு துரோகம் இழைத்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், சசிகலா உள்ளிட்ட யாரையும், மீண்டும் அடிப்படை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள். அதிமுக இணைப்பு என திரும்ப பேச வேண்டாம், அதிமுக ஒன்றிணைந்துவிட்டது என பேசினார்.