எடப்பாடியில் முதல்வரை எதிர்த்து களமிறங்கும் சம்பத் குமார்! முதன்முறையாக போட்டியிடுகிறார்
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் நேரடியாக அதிமுக அமைச்சர்கள், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து திமுக-வே களமிறங்கியுள்ளது. குறிப்பாக எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து சம்பத்குமார் போட்டியிடுகிறார்.
எடப்பாடி தொகுதியில், அதிமுக சார்பாக போட்டியிடும் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து சம்பத்குமார் போட்டியிடுகிறார். ஏற்கனவே 2011, 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற பழனிசாமி, மூன்றாவது முறையாக களம்காண்கிறார்.
திமுக சார்பில் போட்டியிடும் சம்பத்குமார் முதன்முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார், MCA பட்டதாரியான சம்பத்குமார்(வயது 37), 2003ம் ஆண்டில் திமுகவில் இணைந்தார்.
2015-ம் ஆண்டு முதல் சேலம் மேற்கு மாவட்ட துணை செயலாளராக இருப்பதுடன், கொங்கனாபுரம் பேரூர் இளைஞரணி முன்னாள் செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.