ராஜ்யசபா சீட்டா? எப்போது சொன்னோம் - தேமுதிகவுக்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்!
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
ராஜ்யசபா சீட்
கடந்த மாதம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
அதிமுகவுடன் கூட்டணி முடிவான போதே ராஜ்ய சபா சீட் குறித்து ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. ராஜ்யசபா எம்பி ஆக தேமுதிக சார்பில் யார் தேர்வு செய்யப்பட்ட டெல்லிக்கு செல்வார் என்பதை செய்தியாளர்களை அழைத்து முறைப்படி அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தார்.
இபிஎஸ் கொந்தளிப்பு
இந்நிலையில் சேலம், ஆத்தூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கூட்டணியை எல்லாம் விட்டு விடுங்கள். தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்காதீர்கள், ராஜ்யசபா சீட்டு குறித்து நாங்கள் ஏதாவது சொன்னமோ? யார் யாரோ கேட்கும் கேள்விகளை எல்லாம் எங்களிடம் கேட்காதீர்கள்.
தேர்தல் அறிக்கை வந்தபோது நாங்கள் ஏதாவது கூறினோமா? தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று பாருங்கள்" எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.