இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிகமான இழப்பீடு தொகையை பெற்றுத் தந்த முதல் மாநிலம் தமிழகம்தான் - எடப்பாடி
தஞ்சை மாவட்டம் திருவையாறு தேரடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சியான பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது - பூண்டி வெங்கடேசன் அவர்கள் வல்லவர் நல்லவர் அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் திருவையாறு பகுதியில் 290 கோடி ரூபாய் பூமியை வழங்கப்பட்ட கல்லணை கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த கூடாது என்பதற்காக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக அரசு. துணை முதலமைச்சராக ஸ்டாலின் இருந்தபோது ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்துப் போட்டு அதனை இங்கு கொண்டு வந்தார். கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்திற்கு 80,000 கோடி, பாரதப் பிரதமர் மோடி உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்கள் ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி.
விவசாயிகளின் துன்பம் கஷ்டம் அனைத்தும் எனக்கு தெரியும் ஏனென்றால் நான் விவசாயி ஆனால் நான் விவசாயி என்று சொன்னால் ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை நதிகள் ஓடைகள் என அனைத்து இடங்களிலும் தடுப்பணை கட்டி நீரை பாதுகாத்து வருகிறோம். விவசாயத்திற்கு சுத்தமான நீர் வழங்க வேண்டும் அப்போதுதான் விளைச்சல் நன்றாக இருக்கும்.
விவசாயத்திற்கு தேவையான காவிரிநீர் அசுத்தமாயை வந்தால் விளைச்சல் பாதிக்கும் எனவே தான் நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை வந்தாள் காவிரி நீர் சுத்தமாக வரும் இது ஸ்டாலினுக்கு தெரியுமா என முதல்வர் கேள்வி குடியரசுத் தலைவர் உரையில் நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை இடம் பெறச் செய்து, நடந்தாய் வாழி காவேரி நடைமுறைப் படுத்துவோம் என மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிகமான இழப்பீடு தொகையை பெற்றுத் தந்த முதல் மாநிலம் தமிழகம். கொரானா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும்.