மதுரை பிரமாண்ட பிரசார கூட்டத்தில் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
வருகிற 2ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர்.
ஏப்ரல் 2ம் தேதி மதுரையில் நடக்கும் இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்கு முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் மார்ச் 28-ம் தேதி சேலத்தில் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
இவர்களுடன் திருமாவளவன், வைகோ, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.