ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே உட்கட்சி மோதல்? என்ன நடக்கிறது அதிமுகவில்?

edappadi aiadmk pannerselvam
By Jon Mar 08, 2021 04:14 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகள் மும்முரமாக இறங்கியுள்ளன.

இந்நிலையில் விருப்ப மனுக்களை பெற்ற அதிமுக ஒரே நாளில் வேட்பாளர்கள் நேர்க்காணலை நடத்தி முடித்திருக்கிறது. அதனையடுத்து, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கியமான 6 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே உட்கட்சி மோதல்? என்ன நடக்கிறது அதிமுகவில்? | Edappadi Panneerselvam Party Conflict

இந்நிலையில் மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, இன்று அதிமுக அலுவலகத்தில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் ஓபிஎஸ் மட்டுமே பங்கேற்று கேக் வெட்டியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் ஈபிஎஸ் பங்கேற்காததால் கட்சிக்குள் உட்பூசல் நிலவி வருகிறதா என்ற ரீதியிலும் பேச்சுகள் கசியதொடங்கியுள்ளன.