கள்ளச்சாராயம் விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் இபிஎஸ்
ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி .
கள்ளச்சாராய விவகாரம்
கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 22 பேர் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரம் பெரும் பூதாகரமான நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதை பொருட்கள் பழக்கம், கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணைக்கு வலியுறுத்தி எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ரவியிடம் இன்று மனு அளிக்க உள்ளார். சைதாப்பேட்டையில் இருந்து இபிஎஸ் தலைமையில் பேரணியாக சென்று மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநரிடம் மனு
இதற்காக சைதாப்பேட்டை சின்னமலை அருகே இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகை செல்கின்றனர். அங்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
ஆளுநர் மாளிகை நோக்கி இன்று அ.தி.மு.க. பிரம்மாண்ட பேரணி நடத்த இருப்பதையொட்டி சென்னை மற்றும் புறநகரில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் அதில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.