அதிமுக தலைமை அலுவலகம் சென்றார் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் முறையாக தலைமை அலுவலகம் சென்றார் எடப்பாடி பழனிசாமி.
இரு தரப்பு மோதல்
கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கபட்ட நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சீல் அகற்றப்பட்டு சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு
பின்னர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளார். இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சிபிசிஐடி விசாரணை உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமியை அதிமுக அலுவலகத்தில் அனுமதிக்கக்கூடாது என்று புகார் மனு அளித்துள்ளார்.
தொண்டர்கள் படை சூழ சென்ற ஈபிஎஸ்
இதனிடையில் தொண்டர்கள் குடை சூழ அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் தலைமை அலுவலகம் வந்த எடப்பாடி பழனிசாமி மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.