தம்பி அண்ணாமலை திமிர்ல ஆடாத; நாங்க ஒரு மாதிரி பார்த்து நடந்துக்க - எச்சரித்த பழனிசாமி!

K. Annamalai Edappadi K. Palaniswami Lok Sabha Election 2024
By Swetha Apr 13, 2024 04:17 AM GMT
Report

அதிமுகவை ஒழிப்போம் என்று கூறிய அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாய் எச்சரித்துள்ளார்.

தம்பி அண்ணாமலை 

நடப்பாண்டில் மக்களவை தேர்தல் தேதி நெருங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் அரசியல் காட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி, பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியது.ஆனால் அதிமுக அதற்கு முரண்டுபிடித்ததில் இரு கட்சிகளுக்கு இடையே வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது.

தம்பி அண்ணாமலை திமிர்ல ஆடாத; நாங்க ஒரு மாதிரி பார்த்து நடந்துக்க - எச்சரித்த பழனிசாமி! | Edappadi Palaniswami Warned To Annamalai

அவ்வப்போது தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை அதிமுகவை விளாசுவதும் அதற்கு அதிமுக பதிலடி கொடுப்பதும் என்று மோதிக்கொண்டு இருகினற்னனர். அந்த வகையில், 2026 தேர்தலில் அதிமுகவை ஒழிப்போம் என்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.இதனால் மிகுந்த ஆவேசமடைந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய அதிமுக பிரச்சாரத்தில் அண்ணாமலையை மிகக் கடுமையாக சாடினார்.

இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் "இப்ப புதுசா ஒருத்தர் வந்திருக்கிறார் அண்ணாமலை. 2026 தேர்தலில் அதிமுகவை ஒழிப்போம் என்று அவர் பேசியுள்ளார்.தம்பி அண்ணாமலை, அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி, உங்க பாட்டனையே பார்த்த கட்சி.

சிவாஜி உயிருடன் இருந்தால், ஸ்டாலின் நடிப்பில் மயங்கியிருப்பார் - எடப்பாடி கடும் விமர்சனம்!

சிவாஜி உயிருடன் இருந்தால், ஸ்டாலின் நடிப்பில் மயங்கியிருப்பார் - எடப்பாடி கடும் விமர்சனம்!

எச்சரித்த பழனிசாமி

 உன்னைப்போல் எத்தனையோ பேர் இப்படி கொக்கரித்தார்கள். ஆணவ திமிரில் இப்படி பேசாதப்பா. அதிமுக மட்டும் இல்லை என்றால் தமிழகம் வளர்ச்சி பெற்று இருக்காது, ஏற்றம் பெற்று இருக்காது. அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்ததால் தான் இந்த மண்ணில் உள்ள அத்தனை பேரும் நன்மை பெற்று இருக்கிறார்கள்.

தம்பி அண்ணாமலை திமிர்ல ஆடாத; நாங்க ஒரு மாதிரி பார்த்து நடந்துக்க - எச்சரித்த பழனிசாமி! | Edappadi Palaniswami Warned To Annamalai

அப்படிப்பட்ட எங்கள் கட்சியையா நீ அழிக்கப் பார்க்கிறாய்? 1998 ல் தாமரைச் சின்னம் என்ற ஒன்று இருப்பதையே ஊர் ஊராகச் சென்று காட்டியதே அதிமுக தான். தாமரை என்றால் எந்த கட்சியின் சின்னம் என்றே தமிழகத்தில் தெரியாமல் இருந்தபோது அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. அப்போது அதிமுக தொண்டர்கள் ஒவ்வொரு ஊராக தாமரையை எடுத்துச் சென்று இதுதான் சின்னம் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

தம்பி அண்ணாமலை திமிர்ல ஆடாத; நாங்க ஒரு மாதிரி பார்த்து நடந்துக்க - எச்சரித்த பழனிசாமி! | Edappadi Palaniswami Warned To Annamalai

நீ மத்தியில் இருப்பவர்களால் அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்ட கட்சித் தலைவர். எப்போது வேண்டுமானாலும் தலைவர் மாற்றப்படலாம். ஆனால் அதிமுக அப்படியல்ல. இங்கே உழைத்தால் ஏற்றம் பெறலாம். ஆனால் அங்கே, டெல்லியில் நினைத்தால் தலைவராகலாம். அப்படி அப்பாயின்மென்ட்டில் வந்திருக்கிற நீ கொஞ்சம் கவனமாக பேசு. அதிமுக ஒரு மாதிரியான கட்சி.

பார்த்து நடந்துக்க. ஒரு கவுன்சிலராக கூட ஆக முடியவில்லை, எம்எல்ஏ ஆக முடியவில்லை, எம்பியாக முடியவில்லை. நீ வந்து அதிமுகவை ஒழிப்பேன் என்று பேசுகிறாய். பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்று பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் பாடியுள்ளார். ஆனால் நீ அப்படி இல்லை. தலைகணத்தில் ஆடுகிறாய். இது நிலைக்காது. மற்றவருக்கு மரியாதை கொடுத்து திரும்ப பெற்றால் தான் மனிதனாக பிறந்தவர்களுக்கு மரியாதை" இவ்வாறு பேசியுள்ளார்.