தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் – நாளை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி
தேர்தலை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி நாளைமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது பயணத்தை நாளை (ஜூலை 7) கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து தொடங்குகிறார்.
நாளை காலை 9 மணியளவில், மேட்டுப்பாளையம் தொகுதி தேக்கம்பட்டியில் உள்ள வனப்பத்திரகாளியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பிறகு, 10.30 மணிக்கு விவசாயிகளை நேரில் சந்தித்து உரையாடுகிறார்.
அதனைத் தொடர்ந்து, பிளாக் தண்டர் பகுதியில் இருந்து மாலை 4.35 மணியளவில் ஊட்டி சாலை காந்தி சிலை வரையிலான பகுதிகளில் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பின்னர், மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய சந்திப்புக்கு சென்று பொதுமக்களைச் சந்திக்க உள்ளார். மேற்கண்ட ஐந்து முக்கிய இடங்களிலும், எடப்பாடி பழனிசாமி பிரசார வாகனத்தில் இருந்து உரையாற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இந்த தேர்தல் சுற்றுப்பயணத்தின் மூலம், கட்சியின் வாக்குசேகரிப்பை மேம்படுத்தும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.