இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி; அதிருப்தியில் தொண்டர்கள் - என்ன செய்ய போகிறார் இபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் இபிஎஸ் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் தோல்வி
கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வாக்குகள் நேற்று மார்ச் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
இந்த தோல்வியை அடுத்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கே.எஸ்.தென்னரசுவுக்கு வாக்களித்த வாக்களித்தவர்களுக்கு நன்றி என தெரிவித்தார்.

மேலும், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்கு சேகரித்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி எனவும், திரிபுரா, நாகலாந்து ஆகிய சட்டமன்ற தேர்தலில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி – தோல்வி என்பது சகஜமான ஒன்று தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 1 வெற்றி பெற்றுள்ளோம்.
அதே போல, 2021 சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி 75 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. என எனவும், 2024 தேர்தல் மிக பெரிய வெற்றியை அதிமுக பெரும். எனவும் கூறிவிட்டு சென்றார் எடப்பாடி பழனிசாமி.