எடப்பாடி பழனிசாமியின் பதவி தற்காலிகமானது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M. K. Stalin AIADMK Edappadi K. Palaniswami
By Thahir Sep 09, 2022 06:41 AM GMT
Report

தமிழக மக்களின் நலனுக்காக இரவு - பகல் பார்க்காமல் உழைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கையில் குறிப்புடன் வந்துள்ளேன் முதலமைச்சர் 

வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண விழா என்று விளம்பரபடுத்தாமல் மண்டல மாநாடு என கூறியிருக்கலாம். மகனின் திருமணம் மூலம் கட்சி, வளர்ச்சி, எழுச்சி பெற வேண்டும் என இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் பதவி தற்காலிகமானது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Edappadi Palaniswami S Post Is Temporary Mk Stalin

திருமண விழாவிற்கு குறிப்பு எடுத்து செல்வது இல்லை. அமைச்சர் மூர்த்தியை பற்றி பேச வேண்டி இருப்பதால் இந்த விழாவிற்கு குறிப்புடன் வந்துள்ளேன்.

மூர்த்தி பெரிதா? கீர்த்தி பெரிதா என கேட்டால் கீர்த்தி பற்றி தெரியல மூர்த்தி தான் பெரியது. திமுக மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்தார்.

எடப்பாடியின் பதவி தற்காலிகமானது 

மக்கள் அளித்த நம்பிக்கைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம். எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் எங்கள் பணி இருக்கும் என கூறியது போல நிறைவேற்றி வருகிறோம்.

பொய் பிரச்சாரத்தை பற்றி கவலை வேண்டாம், அதனை பற்றி பேச நேரமில்லை. மக்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவோம்.

திமுக எம்எல்ஏக்கள் எடப்பாடியுடன் பேசுவதாக கூறுகிறார். அதிமுக எம்எல்ஏக்களே அவருடன் பேசுவதில்லை. அவர்களுடைய கட்சியே பிளவுபட்டு போய் இருக்கிறது.எடப்பாடியின் பதவியும் தற்காலிகம் தான் என அவர் தெரிவித்துள்ளார்.