முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் இன்ப சுற்றுலா : மு.க.ஸ்டாலின் பயணம் குறித்து எடப்பாடி விமர்சனம்
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள நிலையில் முதலமைச்சர் இரு நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பயணம்
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தொழில் அதிபர்களை சந்திக்கவும், தொழில் முதலீட்டை ஈர்க்கவும் ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் முதலமைச்சரின் பயணம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து கூறிய போது
எடப்பாடி கருத்து
ஏற்கனவே குடும்பத்துடன் துபாய் இன்பச் சுற்றுலாவை மேற்கொண்ட தி.மு.க. அரசின் முதலமைச்சர் இப்போது, மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா? அல்லது முதலீடு செய்யப் போகிறாரா? என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.