Saturday, Jul 12, 2025

எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் : பாதுகாப்பு கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai 3 years ago
Report

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

எடப்பாடிபழனிச்சாமி பயணம்

இதுவரை 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடித்துள்ள அவர், சுதந்திர தினத்துக்கு பிறகு மீண்டும் திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை தொடர உள்ளார்.

பாதுகாப்பு கேடு மனு

இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சரான அவருக்கு சுற்றுப் பயணத்தின்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த அ.தி.மு.க. வக்கீல் ஏ.பி.மணிகண்டன், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் : பாதுகாப்பு கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு | Edappadi Palaniswami Protection Petition Office

அதில், "அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நபர்களால், ஏனைய சமூக விரோதிகளால் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே அவருடைய பாதுகாப்பை அதிகரித்து உரிய உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.