எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை - மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கிருஷ்ணகிரி தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவனை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அதேபோல், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய முக ஸ்டாலின், ’அதிமுக ஆட்சியில் அரசு டெண்டர்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
காவேரி உரிமையை பாதுகாக்கவோ, நீட் தேர்வை தடுக்கவோ அதிமுக அரசால் முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை’ என்றார்.