எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுக நேர்காணல் தொடங்கியது

ops eps edappadi
By Jon Mar 04, 2021 01:52 PM GMT
Report

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 9 பேர் கொண்ட குழுவினர், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணலை இன்று தொடங்கியுள்னர். அதிமுக சார்பில் கடந்த 24ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்வது தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

மொத்தம், 8 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்துள்ளனர், இந்நிலையில் இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நேர்காணல் தொடங்கியுள்ளது.

அதிமுக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நாளில் காலை, மாலை என இரு பிரிவுகளாக வேட்பாளர் நேர்காணல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.