மதுரை செல்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai 2 மாதங்கள் முன்

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மதுரை, சிவகாசி மாவட்டங்களுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.   

அதிமுகவில் குழப்பம்

அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் ஒருவரையொருவர் மாறி, மாறி விமர்சித்து வருகின்றனர்.

மதுரை சுற்றுபயணம்

இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், மதுரை, சிவகாசி மாவட்டங்களுக்கு செல்கிறார்.

மதுரை செல்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami Is Going To Madurai Today

அங்கு, இந்த இரண்டு மாவட்டங்களிலும், பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அ.தி.மு.க.வில் ஒட்டுமொத்த செல்வாக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.