ஜி20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் எடப்பாடி : காரணம் என்ன?
Edappadi K. Palaniswami
By Irumporai
ஜி20 மாநாட்டை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறபோகும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக தயார்படுத்துவது தொடர்பாக நாடு முழுவதும் அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதில் கலந்து கொள்ளும்படி தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர் நாளை காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். இந்தநிலையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கூட்டத்தில் பங்கேற்கவரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமரின் அழைப்பை ஏற்று அவரும் டெல்லி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.