திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை திருப்பதி ஏழுமலையான இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதியில் எடப்பாடி
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமான நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்ந்தெடுத்தது செல்லும் என்று தெரிவித்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி தொண்டர் படைசூழ அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
இன்று காலை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு விசாரணைக்கு வருவதை ஒட்டி இந்த பயணம் திட்டமிடப்பட்டிருப்பதாக குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் #எடப்பாடியார் pic.twitter.com/wtgq1ddHlP
— EPS 24×7 (@edapadiyaar) September 10, 2022