எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு : காரணம் என்ன?

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai May 07, 2023 04:50 AM GMT
Report

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடிபழனிச்சாமி

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். எடப்பாடிபழனிச்சாமி தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு : காரணம் என்ன? | Edappadi Palaniswami Has Booked Under 3 Section

 சொத்துமதிப்புவிவகாரம்

2021 சட்டசபை தேர்தலின் போது வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக வழக்கறிஞர் மிலானி என்பவர் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 125ஏ(1), 125ஏ(I), 125ஏ(II) பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.