வெற்றி மெகா ஊழல் திட்டம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
edappadi palanisamy criticizes vetri mega scam electricity procurement: தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் செய்வதை வெற்றி மெகா ஊழல் திட்டம் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
வெற்றி மெகா ஊழல் திட்டம்
ஓமலூரில் நடைபெற்ற சேலம் புறநகர் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதில் பேசிய அவர், "5 நிமிடம் பேசினாலே கொத்து பரோட்டாதான் என்று பேசியவர்கள் இடைத்தேர்தலில் தெருத்தெருவாக சென்றனர். உண்மையில் நாம்தான் அவர்களை கொத்து பரோட்டா போட்டிருக்கிறோம்.
ஜனநாயக முறைப்படி தவெக தேர்தலை சந்திக்கவில்லை. பணபலம், அதிகார பலத்தால்தான் தவெக வெற்றி பெற்றுள்ளது.
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் வாங்காத ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் தவெக அரசு மின்சாரம் வாங்குகிறது.
திமுக ஆட்சியில் ரூ.20க்கு மின்சாரத்தை வாங்கியதை ஊழல் என்று விமர்சித்த விஜய், தற்போது ஒரு யூனிட் ரூ.35க்கு வாங்குகிறார். செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்கின்றனர்.
ஆந்திர மாநில அரசு அக்டோபரில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.15 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்தது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்வதை 'வெற்றி மெகா ஊழல் திட்டம்' எனக் கூறலாம்" என கூறியுள்ளார்.
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பு முதற்கட்ட நேர்முகப் பரீட்சைப் பட்டியல்கள் வெளியீடு IBC Tamil
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan