முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Dec 27, 2022 04:50 AM GMT
Report

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

 எடப்பாடி ஆலோசனை 

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை | Edappadi Palaniswami Consults Executives Today

 ஆலோசனை கூட்டம்

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறிய நிலையில், இன்று இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.