அதிமுக பொதுக்குழு வழக்கு .. கோரிக்கை வைத்த ஓபிஎஸ் .. வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Aug 23, 2022 05:46 AM GMT
Report

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து, ஈ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு - ஓபிஎஸ்-ன் கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு விவகாரம்

அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதிமுக பொதுக்குழு வழக்கு .. கோரிக்கை வைத்த ஓபிஎஸ் .. வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம் | Edappadi Palaniswami Case Adjourned Till 25Th

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலை கட்சியில் தொடர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.

கோரிக்கைவைத்த ஓபிஎஸ்

இந்த நிலையில் தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த வக்கீல் விஜய் நாராயண் ஆஜராகி, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று வாதிட்டார் .

அதிமுக பொதுக்குழு வழக்கு .. கோரிக்கை வைத்த ஓபிஎஸ் .. வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம் | Edappadi Palaniswami Case Adjourned Till 25Th

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு மனு இன்றுவிசாரணைக்கு வந்தது இந்த வழக்கினை நீதிபதிகள் துரைசாமி,சுந்தர் மோகான் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் குரு கிருஷ்ணக்குமார் ஆஜராக அவகாசம் கேட்டதால் வழக்கின் விசாரணை வரும் 25 - ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.