எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Jiyath Oct 17, 2023 02:45 AM GMT
Report

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

பொறுப்பாளர்கள் கூட்டம்

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு அதிமுக பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்! | Edappadi Palaniswami Admk Consultative Meeting

இந்த கூட்டத்தில் பூத் கமிட்டிகள் அமைப்பது, இளைஞர்-இளம்பெண்கள் பாசறைகளை ஏற்படுத்துதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

செய்திக்குறிப்பு

இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக,

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்! | Edappadi Palaniswami Admk Consultative Meeting

பூத் கமிட்டி அமைத்தல் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கண்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.